சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 29 DEC 2022 2:57PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2022-ம் ஆண்டில் மேற்கொண்ட முக்கிய செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் சில:

  • கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சிறப்பான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. கொவிட் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கப்பல் துறை அமைச்சகம் உள்ளிட்ட  பல்வேறு அமைச்சகங்களுடன் சுகாதார அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேச அரசுகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • கொவிட் பாதிப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கண்காணிப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடந்து சிறப்பாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • 06 டிசம்பர் 2022 நிலவரப்படி நாட்டில் தகுதியான 91 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொவிட் தடுப்பூசியும், 90 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 27 சதவீதம் பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கையாக துணை சுகாதார மையங்கள், கிராமப்புற சுகாதார  மையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 1 லட்சத்து ஐம்பதாயிரம் நலனாய்வு மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 10 கோடியே 74 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  20 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தகவல்கள் அடிப்படையில் 26 டிசம்பர் 2022 தேதி அடிப்படையில் நாடு முழுவதும் 1 லட்சத்து 41,830 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • தேசிய சுகாதார இயக்கம் சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரித்துள்ளது.
  •  30.6.2022 நிலவரப்படி தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் 27,606 ஆயுஷ் மருத்துவர்களும் 4,337 ஆயுஷ் துணை மருத்துவர்களும்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். 
  • ஆயுஷ் மருத்துவம் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு  பொது சுகாதார மையங்களில் ஆயுஷ் சேவைகளுக்கான பிரிவு தொடங்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மற்றும் அதற்கு கீழ் நிலையில் சிறப்பு மருத்துவநிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • தேசிய ஆம்புலன்ஸ் சேவைகள் (என்ஏஎஸ்) மூலம் தற்போதைய நிலவரப்படி 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 108 மற்றம் 102 எண் சேவைகள் மூலம் அவசரகால மருத்துவ வாகன வசதிகள் கிடைக்கின்றன. அவசரநிலை மருத்துவ நோயாளிகள், விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களில் போன்றவர்களுக்கு உதவ 108 சேவை பயன்படுகிறது.  குழந்தைகள் தொடர்பான மருத்துவம் பிரவசகால மருத்துவத்திற்கு 102  என்ற பிரத்தியேகச் சேவை செயல்படுத்தப்படுகிறது.
  • ஆஷா பணியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய சுகாதார இயக்கத்தில் ஏழாவது கூட்டத்தில்  07.09.2022 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் 1,162 நகரங்கள் பயன் பெறுகின்றன.
  • பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார இயக்கத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டு வரை 64,180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான இதுவும் ஒன்றாகும்.
  • குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் நலனுக்காக பல்வேறு தடுப்பூசி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்திர தனுஷ் இயக்கத்தின் 4-வது கட்டத்தின் கீழ் பிப்ரவரி 2022 முதல் மே 2022 வரை 59 லட்சத்து 90 ஆயிரம் குழந்தைகளுக்கும் 15 லட்சத்து பத்தாயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
  • தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் முற்றிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 55 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
  • 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துப் பல்வேறு நிலைகளில் அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • மருத்துவக் கல்லூரிகளும்  மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும்  தொடர்ந்து அதிகரிப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887285

 ***********

AP/PLM/RJ/KRS



(Release ID: 1887333) Visitor Counter : 389


Read this release in: English , Marathi