பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு ஓய்வூதிய அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
29 DEC 2022 1:35PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் சில:
- ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள்:
- பிரதமர் திரு நரேந்திர மோடி 22 அக்டோபர் 2022 அன்று காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்.
- நாடு முழுவதும் காணொலிக் காட்சி மூலம் ஆட்சேர்ப்பு இயக்கமான வேலைவாய்ப்பு முகாமின் இரண்டு பகுதிகளின் போது 1.46 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு முகாம்கள், இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான மத்திய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டப் புதிய நபர்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளில் சேருகின்றனர்.
- நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் இணைகின்றனர்.
- இந்த ஆட்சேர்ப்புகள் விரைந்த முறையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளாலோ அல்லது யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் போன்ற ஆட்சேர்ப்பு முகமைகள் மூலமாகவோ செய்யப்படுகின்றன. விரைவான ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்காக, தேர்வு செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
- கர்மயோகி பிரராரம்ப்: புதிதாகப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இணையதளம் மூலம் பல்வேறு திறன்கள் மற்றும் தலைமைப் பண்புகள் தொடர்பாகப் பயிற்சி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி 2022 நவம்பர் 22 அன்று கர்மயோகி பிரராரம்ப் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- அலுவலகக் குறிப்பாணைகளை ஒருங்கிணைத்தல்: பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்திற்காக அலுவலகக் குறிப்பாணைகளை டிஜிட்டல் வடிவில் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி, பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையால் வழங்கப்பட்டுள்ளது.
- சிறப்புப் பிரசவகால விடுப்பு: குழந்தைப் பிறந்த உடன் இறந்துவிட்டாலோ அல்லது இறந்தேப் பிறந்தாலோ பெண்களின் உணர்வுகள் மற்றும் அதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு 02-09-2022 அன்று சிறப்புப் பிரசவகால விடுப்புத் தொடர்பான அலுவலகக் குறிப்பாணை வெளியிடப்பட்டது.
- இ-ஹெச்ஆர்எம்எஸ் எனப்படும் மின்னணு முறையிலான மனிதவள மேலாண்மை நடைமுறை 2.0: மின்னணு முறையிலான மனிதவள மேலாண்மை நடைமுறையின் இரண்டாவது கட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு பல்வேறு மதிப்புக்கூட்டுச் சேவைகள் வழங்கப்படுவதுடன் அவர்களது அனுபவம் மற்றும் பணித்திறன் அடிப்படையில் அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- ஐஜிஓடி செயலி: ஒருங்கிணைந்த அரசுமுறை இணையதளக் கற்றலுக்கான ஐஜிஓடி செயலி ஆண்ட்ராய்டு தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் பணித் தொடர்பான தகவல்களை தெரிந்துக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
- பிராபிடி (PROBITY) இணையதளத்தின் மறுசீரமைப்பு: பிராபிடி இணையதளத்தில் பயணாளர்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் துறைகள் மாதாந்திர அடிப்படையில் தரவுகளை சமர்ப்பிக்கின்றன.
- அதிக அளவிலான பதவி உயர்வு: மத்திய செயலக சேவை, மத்திய செயலக ஸ்டெனோகிராஃபர் சேவைகள் மற்றும் மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகியவற்றில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887250
***********
AP/PLM/RJ/KRS
(Release ID: 1887294)
Visitor Counter : 218