பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

மத்திய காசநோய் பிரிவுடன் இணைந்து உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தீவிர காசநோய் ஒழிப்புத் திட்டத்தை இந்தியன் ஆயில் தொடங்கியுள்ளது

Posted On: 28 DEC 2022 4:28PM by PIB Chennai

காசநோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு வரலாற்று மைல்கல்லாக, தீவிர காசநோய் ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய காசநோய் பிரிவு மற்றும் உத்தரபிரதேசம்சத்தீஸ்கர் மாநிலங்களுடன் இந்தியன் ஆயில் (இந்திய எண்ணெய்க் கழகம் ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நீடித்த  வளர்ச்சி இலக்கைவிட ஐந்து ஆண்டுகள் முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரிமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதுஇந்திய எண்ணெய்க் கழகத்தின் சார்பில் அதன் மனிதவளப் பிரிவு இயக்குனர் திரு ரஞ்சன் குமார் மொஹபத்ராசுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கொள்கைப் பிரிவு இணைச்செயலாளர் திரு விஷால் சௌகான், சத்திஷ்கர் மாநிலக்  காசநோய் தடுப்பு அதிகாரி டாக்டர் தர்மேந்திர கவாய், உத்தரப் பிரதேச  காசநோய் தடுப்பு அதிகாரி டாக்டர் சைலேந்திர பட் நாகர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்திய எண்ணெய்க் கழகத்தைத் தாம் பாராட்டுவதாகக் கூறினார்.   காச நோயை எதிர்த்துப்  போராடுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இந்த  ஆக்கபூர்வ முன்முயற்சியை மேற்கொண்டதற்காக மட்டுமின்றி அதனை உறுதியாக அமல்படுத்துவதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் சுகாதார முறையை வலுப்படுத்தும் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப்  பார்வையுடன் இணைந்து இந்திய எரிசக்தித் துறையின் இந்த உறுதிப்பாடு ஒரு மைல் கல்லாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய எரிசக்தி பொதுத்துறை நிறுவனங்கள் சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் எவ்வாறு தொடர்ந்து ஈடுபடுகின்றன  என்பது கொவிட் பெருந்தொற்று காலத்திலும் வெளிப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

2025-க்குள் காச நோயை முற்றிலும்  ஒழிப்பதற்கான பிரதமரின் இயக்கத்தை வலுப்படுத்தும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள இரண்டு மாநிலங்களையும் இந்திய எண்ணெய்க் கழகத்தையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார்.

முன்னதாக பிரமுகர்களை வரவேற்றுப் பேசிய இந்திய எண்ணெய் கழகத்தின் மனிதவளப்  பிரிவு இயக்குநர் திரு ரஞ்சன் குமார் மொஹபத்ரா இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி பொதுத்துறை நிறுவனமான இந்திய எண்ணெய்க்  கழகம், பெட்ரோலிய பொருட்களின் வணிகத்திற்கு அப்பால் தேசத்திற்கான உறுதிப்பாடுகளில்  எப்போதும் இணைத்துக் கொண்டிருப்பதாக கூறினார்தேசத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த கொவிட் பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் முன்னணியில் இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

 உலகில் ஆண்டுதோறும் 10 மில்லியன் பேரிடம் காச நோய்  தொற்றுவதாகவும், சுமார் 1.5 மில்லியன் பேர் இந்நோயால்  உயிரிழப்பதாகவும்  உலக அளவில் ஆண்டுதோறும்  காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887066

*********

SM/SMB/RJ/KRS



(Release ID: 1887142) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi