அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2022-ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சி.எஸ்.ஐ.ஆர்-இன் முக்கிய சாதனைகள்

Posted On: 27 DEC 2022 9:21AM by PIB Chennai

•     நிலைத்தன்மை மற்றும் மாற்று எரிபொருட்களுக்கு வழிவகை செய்யும் வகையில் நாட்டில் முதன்முறையாக உயிரி எரிவாயுவில் இயங்கும் விமான சேவையை டேராடூனில் இருந்து தில்லி வரை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர் துவங்கியது. உயிரி விமான எரிபொருளை சி.எஸ்.ஐ.ஆர்- ஐ.ஐ.பி (IIP) உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

•     சி‌.எஸ்.ஐ.ஆர்- வாசனை இயக்கத்தின் கீழ் 46 முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 6000 ஹெக்டேர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

•     ஒரு டன் நெகிழி கழிவுகளை 850 லிட்டர் தூய்மையான டீசலாக மாற்றும் தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர்- ஐ.ஐ.பி மற்றும் கெயில் ஆகியவை உருவாக்கியுள்ளன.

•     வேளாண் ரசாயனம், மருந்தகம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் ஹைட்ரேட்டைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர்- ஐ.ஐ.சி.டி வடிவமைத்துள்ளது.

•     சி.எஸ்.ஐ.ஆர்- நீரி (NEERI) நிறுவனம், நிலையான கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்முறைகளான சதுப்பு நிலங்களை அமைப்பதற்கான ரீநியூ‌(RENEU) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

•     தோல் உற்பத்தி செயல்முறையில் எலக்ட்ரோ- ஆக்சிடைசன் அடிப்படையிலான கழிவுநீர் வெளியேற்றம் இல்லாத தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர்- சி.எல்.ஆர்.ஐ கண்டுபிடித்துள்ளது.

•     பாதுகாப்பான விமான நிலைய சேவை மற்றும் விமானம் தரையிறங்குவதற்கு உதவும் பார்வை அளவீட்டு அமைப்புமுறையான த்ரிஷ்டி டிரான்ஸ்மிசோட்டரை சி.எஸ்.ஐ.ஆர்-நால் (NAL) நிறுவனம் கண்டுபிடித்து, இந்தியாவின் பெரும்பாலான விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பத்தின் உரிமையை பரிமாற்றம் செய்துள்ளது.

•     நிலநடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான தொழில்நுட்பத்தை சி.எஸ்.ஐ.ஆர்-சி.பி.ஆர்.ஐ (CBRI) மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி  உருவாக்கியுள்ளன.

•     சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வகங்களில் தேவையான தொழில்நுட்ப திறன்களை இளைஞர்களுக்கு வழங்குவதற்கான திறன் இந்தியா முன்முயற்சியை சி.எஸ்.ஐ.ஆர் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886797

**************

PKV/RB/RR



(Release ID: 1886818) Visitor Counter : 218


Read this release in: Hindi , Marathi