அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எஃகு அடி மூலக்கூறுகளில் உருவாக்கப்பட்ட ஆர்கானிக் சோலார் (கரிம சூரிய) மின்கலங்கள், எஃகு கூரையை ஆற்றல் உற்பத்தி செய்யும் சாதனமாக மாற்றும்
प्रविष्टि तिथि:
24 DEC 2022 11:26AM by PIB Chennai
எஃகு அடி மூலக்கூறுகளில் உருவாக்கப்பட்ட ஆர்கானிக் (கரிம) பாலிமர் மற்றும் பிசிபிஎம் (ஒரு கரிம குறைக்கடத்தி) ஆகியவற்றின் கலவையைக் கொண்ட ஒரு ஆர்கானிக் சோலார் (கரிம சூரிய) மின்கலன்கள், பயன்பாட்டில் உள்ள மின்கலன்களை விட அதிக செயல்திறனுடன் கூடிய, அதன் எஃகு கூரையை ஆற்றல் உற்பத்தி செய்யும் சாதனமாக மாற்றும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மூன்றாம் தலைமுறை சூரிய மின்கல தொழில்நுட்பங்களின் திறனானது, நெகிழ்வான மற்றும் பொருத்தமான மேற்பரப்புகளுடன் ஒருங்கிணைப்பதில் சிறப்பாக செயல்படும். இந்த ஒருங்கிணைப்புக்கு இந்தியம் டின் ஆக்சைடுக்கு மாற்றாக புதிய உயர்மட்ட வெளிப்படையான கடத்தும் மின்முனைகளை உருவாக்குவது அவசியமாகிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ள ஒளிமின்னணு பொருள், அதன் உறுதியற்றத் தன்மை மற்றும் அதன் ஒளிமின்னணு செயல்திறன் வெப்பநிலையைப் பொறுத்து மாறும் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
ஐஐடி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ஆர்கானிக் சோலார் செல் சாதனங்களை உருவாக்கியுள்ளனர். இதில் ஆர்கானிக் பாலிமர் பிடிபி7 ஒரு ஒருங்கிணைப்பாளாராகவும், பிசிபிஎம் ஒரு பிணைப்பாளராகவும் உள்ளது. ஐஐடி கான்பூரில் உள்ள பேராசிரியர் ஆஷிஷ் கர்க்கின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியானது, பல அடுக்கு மின்முனைகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளை கரிம சூரிய மின்கலங்களுடன் ஒருங்கிணைப்பதை நிரூபித்தது. இது 'எனர்ஜி டெக்னாலஜி' இதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மின்முனைகள் உலோக மின்முனைகளுடன் ஒப்பிடும்போது அதிக ஆப்டிகல் டிரான்ஸ்மிஷனை வழங்குகின்றன. தங்கத்தின் ஒற்றை அடுக்கு மேல் உலோக மின்முனைகளுடன் ஒப்பிடுகையில், பல அடுக்கு மின்முனைகளைக் கொண்ட சாதனங்கள் ஒளிமின்னழுத்த செயல்திறனில் 1.5 மடங்கு தெளிவான சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டின. இதன் அடிப்படையில், எஃகு அடி மூலக்கூறுகளில் உருவாக்கப்பட்ட ஆர்கானிக் சோலார் (கரிம சூரிய) மின்கலங்கள், எஃகு கூரையை ஆற்றல் உற்பத்தி செய்யும் சாதனமாக மாற்றும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
**************
SM/GS/DL
(रिलीज़ आईडी: 1886260)
आगंतुक पटल : 236