பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அதிகளவில் தீர்வு கண்டு சாதனை

प्रविष्टि तिथि: 22 DEC 2022 5:37PM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியையும் மீறி கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் திரு  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அதிகளவில் தீர்வு காணப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருப்பதாக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, புவி அறிவியல், தனிநபர் நலன்,  ஓய்வூதியம்  மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை இணையமைச்சர் டாக்டர்  ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக கொரோனா பாதித்த பெருந்தொற்று காலத்தில், ஆர்டிஐ கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தகுந்த விசாரணை நடத்தப்பட்டு அதிகளவில் தீர்வு காணப்பட்டது என்று கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், கடந்த 2007முதல் 2014ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யூபிஏ) ஆட்சியில் 1,32,406 ஆர்டிஐ மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாகக் கூறினார். அதே நேரத்தில்  2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான  ஏழு ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 1,60,643 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். அதாவது, யூபிஏ அரசு, தீர்வு கண்ட மனுக்கள் சதவீதம்  81.79ஆகவும், திரு.நரேந்திர மோடி அரசு தீர்வு கண்ட மனுக்கள் சதவீதம் 92 ஆக இருப்பதையும் அமைச்சர் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் ஆன்லைன் மூலம் தங்கள் பணிகளை தவறாமல் செய்ததே  இந்த வெற்றிக்கு காரணம் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

 

**************

SG/ES/RS/GK


(रिलीज़ आईडी: 1885853) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu