சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நாட்டில் மின்சார வாகனங்களின் மேம்பாட்டில் பேட்டரி மாற்றும் கொள்கை முக்கியப் பங்காற்றும்
प्रविष्टि तिथि:
22 DEC 2022 1:08PM by PIB Chennai
மின்சார வாகனத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, குறைந்த செலவில் வாகனப் பேட்டரியில் சார்ஜ் செய்துகொள்ளுதல், குறைந்த இடத்தை பிடித்தல், குறைந்த நேரத்தில் சார்ஜிங் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பேட்டரி மாற்றும் கொள்கை வடிவமைக்கப்பட உள்ளது. ஏனெனில், நாட்டில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியில் இந்த பேட்டரி மாற்றும் கொள்கை முக்கிய பங்காற்றுகிறது.
எனவே, இந்த பேட்டரி மாற்றும் கொள்கைக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுப்பதற்காக இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி பேட்டரிகளின் எளிய வடிவமைப்பு, பாதுகாப்பு, தரம், நுகர்வோர் நலன் உள்ளிட்ட பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை உருவாக்கும்.
மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
**************
AP/ES/RS/GK
(रिलीज़ आईडी: 1885845)
आगंतुक पटल : 200