உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவைகளை எளிதாகவும் பயனாளருக்கு உகந்ததாகவும் உருவாக்க சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகத்தின் இ-நிர்வாகம் பாடுபடுகிறது

Posted On: 22 DEC 2022 2:06PM by PIB Chennai

தனது பல்வேறு பங்குதாரர்களுக்கு வெளிப்படைத்தன்மை, பதில்சொல்லும் கடமை மற்றும் எளிதாக வணிகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு  ஒற்றைச் சாளர மின்-ஆளுமைத் தளத்தை சிவில் விமானப் போக்குவரத்துத்  தலைமை இயக்குனரகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் ஒப்புதல்கள்/சான்றிதழ்கள்/உரிமங்களைப் பெறுவதற்கும்,  சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகத்தால் வழங்கப்பட்ட அனைத்து ஒப்புதல்கள், சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை இப்போது அதன் பங்குதாரர்கள் சம்பந்தப்பட்ட இணையப்பக்கங்களில்  ஆன்லைன் மூலம்  அணுகக்கூடியதாக சிவில் விமானப் போக்குவரத்து இ- நிவாகம் மாற்றியுள்ளது.

இதன் மூலம் சேவைகளை எளிதாகவும் பயனாளருக்கு உகந்ததாகவும் உருவாக்க சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகத்தின் இ-நிர்வாகம் பாடுபடுகிறது. 

****

SG/SMB/GK


(Release ID: 1885793) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Telugu