குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உள்நாட்டு விளையாட்டு பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; கடந்த 2014-15-ம் ஆண்டில் 96.17 மில்லியன் டாலர் அளவிற்கு விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அது 2021-2022ஆம் ஆண்டு 326.63 மில்லியன் டாலராக அதிகரித்தது
प्रविष्टि तिथि:
22 DEC 2022 1:05PM by PIB Chennai
தரம் குறைந்த பாதுகாப்பற்ற விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் 332.55 மில்லியன் டாலர் அளவிற்கு விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ஆம் ஆண்டில் 109.72 மில்லியன் டாலராக குறைந்தது. அதாவது சுமார் 67 சதவீதம் அளவுக்கு இறக்குமதி குறைந்துள்ளது. மேலும், கடந்த 2014-15-ம் ஆண்டில் 96.17 மில்லியன் டாலர் அளவிற்கு விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அது 2021-2022ஆம் ஆண்டு 326.63 மில்லியன் டாலராக அதிகரித்தது. இது சுமார் 240 சதவீதம் அதிகரிப்பாகும்.
இத்தகவலை, மக்களவையில் இன்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா, எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
**************
AP/IR/KPG/GK
(रिलीज़ आईडी: 1885724)
आगंतुक पटल : 174