ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

Posted On: 21 DEC 2022 4:03PM by PIB Chennai

பருத்திக்கான ஆதரவு விலையை நடுத்தர நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,080 எனவும், நீண்ட நீளம் கொண்ட பஞ்சுக்கு குவிண்டாலுக்கு ரூ.6,380 எனவும் , 2022-23-ஆம் பருவத்துக்கு (-01.10.2022-30.09.2023) குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் அதிகமாகும்.

உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 64 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்தில் ரூ.19,798 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் 2.45 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜவுளித்துறையை மேம்படுத்த  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா இதுவரை 13 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

மக்களவையில் ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஸ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

************** 


AP/PKV/KPG/GK


(Release ID: 1885486)
Read this release in: English , Urdu