சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஒருங்கிணைந்த பொருளாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் வகை செய்கிறது
Posted On:
21 DEC 2022 2:40PM by PIB Chennai
ஒருங்கிணைந்த பொருளாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் வகை செய்கிறது
புதுதில்லி, டிசம்பர் 21, 2022
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அனைத்து அமைச்சகங்களும், ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், ஒருங்கிணைந்த திட்டமிடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பன்மாதிரி போக்குவரத்து கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடைமுறையை ஏற்படுத்த பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் வகை செய்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, நீர்வழிகள், தொலைதொடர்பு போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்த இது வழிவகுக்கிறது.
பெங்களூரு - சென்னை நான்கு வழி விரைவுச் சாலை உள்பட நாடு முழுவதும் 22 நெடுஞ்சாலைத்திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885354
**************
AP/PKV/KPG/GK
(Release ID: 1885441)
Visitor Counter : 143