சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய திறந்தநிலைப் பள்ளி சார்பில் தேசியக் கருத்தரங்கம்

Posted On: 21 DEC 2022 4:13PM by PIB Chennai

கற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு கல்வியளிப்பதற்காக மத்திய பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தேசியத் திறந்தநிலைப் பள்ளி (என் ஐ ஓ எஸ்) டிசம்பர் 22, 23 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா மையத்தில் மாநில திறந்தநிலைப் பள்ளிகளுக்கான தேசியக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கருத்தரங்கத்தில் புதுச்சேரிமுன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. எம். அரவிந்த், தேசிய திறந்தநிலைப் பள்ளித்தலைவர் திரு, சரோஜ் சர்மா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும், பல்வேறு மாநில திறந்தநிலைப் பள்ளிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

திறந்தநிலைப்பள்ளிகளிடையே வளம், பகிர்வு, ஆலோசனை, தொலைதூர திறந்த நிலைக்கல்வியை விரிவாக்குதல், மாநிலத் திறந்தநிலைப்பள்ளிகளின் தரத்தை ஆராய்ந்து என்ஐஓஎஸ் உடன் உள்ள ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல், புதிய எஸ் ஓ எஸ் அமைத்தல் ஆகியவை இந்த கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். மேலும், தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கங்களை வலியுறுத்தும் வகையில் இந்தக் கருத்தரங்கம் அமையும்.

*********


(Release ID: 1885424)
Read this release in: English