மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீடித்த மீன் ஆதாரங்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 20 DEC 2022 4:44PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளத்தை அதிகரிக்கவும், அதன் ஆதாரங்களை பாதுகாக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  பிரதமரின் மத்சய சம்பாத யோஜனாவின் கீழ், நீர்த்தேக்கங்களில் செயற்கை மீன்வளர்ப்பு முறைகள் மற்றும் செயற்கை பாறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, மழைக் காலத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்களுக்கு ஒரே சீரான மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்துதல், இரட்டை மடி வலை, இழுவைப் படகுகளுக்கு தடை விதித்தல், ஆழ்கடல் மீன் அரிப்புக்கு தடை விதித்தல், எல்இடி பல்புகள் அல்லது மீன்பிடித்தலுக்கு செயற்கை விளக்குகளைப் பயன்படுத்துதல், மீன்குஞ்சுகளை பிடிப்பதைத் தடுத்தல் ஆகியவற்றுடன் இதனைக் கடுமையாக அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் காரணமாக மீன்உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 2021-22-ஆம் ஆண்டில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 162.48 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் காரணமாக மீன் ஆதாரங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள், ஏதுமில்லை.

மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்

------

(Release ID 1885122)

AP/PKV/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1885200) வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English