புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காற்றாலை சக்தியைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் டென்மார்க்குடன் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 20 DEC 2022 3:37PM by PIB Chennai

காற்றாலை சக்தியைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகள் பற்றிய ஒத்துழைப்பு உடன்படிக்கையில் டென்மார்க்குடன் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 06.03.2019 அன்று  கையெழுத்திட்டுள்ளது.

கடலோரக் காற்றாலைத் திட்ட மேலாண்மைக்கான தொழில்நுட்ப திறன் மேம்பாடு, கடல் மற்றும் கரைப்பகுதிகளில்  உயர் செயல்திறன் மிக்க காற்றாலைத் தொழில் நிலைத்தன்மையை உருவாக்க நடவடிக்கைகள் உயர்தர காற்று டர்பைன்கள், உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை உறுதி செய்யும் நடவடிக்கைகள், கரைப்பகுதி காற்றுசக்திக்கான முன்னறிவிப்புகள் உள்ளிட்டவற்றை செயல்படுத்த  இந்த உடன்படிக்கை வகை செய்கிறது.

குஜராத் மாநிலம் உட்பட நாட்டில் காற்றாலை எரிசக்தியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  அதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தத்தின் செயல்பாடு இருக்கும்.

மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.


**************

AP/PKV/KPG/KRS


(Release ID: 1885165)
Read this release in: English , Urdu