புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்திற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் முன்முயற்சி
Posted On:
20 DEC 2022 3:38PM by PIB Chennai
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தை 2022 நவம்பர் 2-ம் தேதி அன்று அறிவிக்கையாக வெளியிட்டது. இத்திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. ரூ.1,715 கோடி மதிப்பிலான பட்ஜெட் ஒதுக்கீட்டில் முதல் கட்டத் திட்டத்திற்கு ரூ.858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி, உயிரி எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட திட்டத்திற்கு மத்திய நிதி உதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் ஏராளமாகக் கிடைக்கும் சாண எரிவாயுவைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கழிவை எரிசக்தியாக மாற்றுவது, உயிரி எரிபொருள் திட்டம், சாண எரிவாயு திட்டம் ஆகியவையாகும்.
மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
**************
AP/PKV/KPG/KRS
(Release ID: 1885161)
Visitor Counter : 239