பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத்துறையில் சுயசார்பு

प्रविष्टि तिथि: 19 DEC 2022 4:33PM by PIB Chennai

நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் சுயசார்பை ஊக்குவிக்க கடந்த சில வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

தற்போது நமது பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை அதி நவீன தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள், மின் உபகரணங்கள், பலவகையான வெடிமருந்துகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அதன் விளைவாக இலகு ரக தேஜஸ் போர் விமானம், தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய ஆகாஷ் ஏவுகணை, அர்ஜூன் போர் பீரங்கி, சீட்டா ஹெலிகாப்டர், மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் உள்ளிட்டவை கடந்த சில வருடங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், உறுப்பினர் திரு. ராகேஷ் சின்ஹா வுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884817     

**************

AP/IR/AG/KRS

 


(रिलीज़ आईडी: 1884925) आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu