சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு

Posted On: 19 DEC 2022 2:00PM by PIB Chennai

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 அறிக்கை அண்மையில்  வெளியிடப்பட்டது. இதில் முன்பிருந்த நிலையைவிட 2 இடங்கள் முன்னேறி இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்துக்  குறியீட்டு வகைகளிலும் ஒட்டுமொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாட்டின் செயல்பாடும்  போதுமானதாக இல்லாததால், முதல் மூன்று இடங்கள் அதாவது 1-3 காலியாக உள்ளன. அதன்பிறகான முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியா (8வது), பிரிட்டன்  (11வது), மற்றும் ஜெர்மனி (16வது). மூன்று ஜி 20 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு  2023ல் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் தரவரிசை ஜி 20 நாடுகளில் சிறந்ததாக உள்ளது.

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்  பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் தரவரிசை வருமாறு: 

பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் – உயர்நிலை

புதுப்பிக்கவல்ல எயசக்தி -  நடுத்தரம்

எரிசக்திப் பயன்பாடு  - உயர்நிலை

பருவநிலக் கொள்கை  - நடுத்தரம்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884764

******

AP/SMB/KRS



(Release ID: 1884903) Visitor Counter : 286


Read this release in: English , Urdu