சுரங்கங்கள் அமைச்சகம்

பல்வேறு மாநிலங்களிலிருந்து மாவட்ட கனிமவள நிறுவனம் சார்பாக பெறப்பட்ட நிதி விவரங்கள்

Posted On: 19 DEC 2022 3:31PM by PIB Chennai

சுரங்க நடவடிக்கைகள் மூலம் பாதிப்புக்குள்ளான மக்களின் நல்வாழ்வுத்  திட்டத்தின் கீழ் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட கனிமவள நிறுவனம் மூலம் நிவாரணங்கள் வழங்கவேண்டும் என்று சுரங்கம் மற்றும் கனிமவள வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட கனிமவள நிறுவனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த மாநில, சட்டங்களின் மூலம் ஒழுங்குமுறைப் படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

சுரங்க நடவடிக்கைகள் மூலம் பாதிப்புக்குள்ளான மக்களின் நல்வாழ்வுத்  திட்டத்தின் வழிகாட்டுதலின்படி,  பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் மக்கள் குறித்த தகவல்களை மாவட்ட கனிமவள நிறுவனம் கண்டறிந்து, அதிகமுன்னுரிமை அளிக்கவேண்டிய பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்  60 சதவீதமும், இதர முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய பகுதிகளுக்கு 40 சதவீதமும் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கனிமவள நிறுவன விதிமுறைகளின்படி, ஒதுக்கப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை அறிந்துகொள்ள ஆண்டு தணிக்கை நடைபெற வேண்டும்.

அதற்கு தேவையான சட்டநடைமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நிதியாண்டு முடியும் தருவாயிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக ஆண்டு அறிக்கையை மாவட்ட கனிம வள நிறுவனம் தயார் செய்து சட்டமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் மார்ச் 2019ம் ஆண்டு வரை மாவட்ட கனிமவள நிறுவனத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட நிதி ரூ.448.21 கோடிகளாகும். நிதியாண்டு 2019-20-ல்  ரூ. 195.05 கோடிகளும், நிதியாண்டு 2020-21-ல் ரூ.153.4 கோடியாகவும், நிதியாண்டு 2021-22-ல் 174.27 கோடியாகவும், நிதியாண்டு 2022-23-ல் ரூ. 111.15 கோடியாகவும், வசூல் செய்யப்பட்டது.

இந்தத் தகவலை ராஜ்யசபாவில் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884789

 **************

AP/GS/RS/KRS



(Release ID: 1884821) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Telugu