மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை மற்றும் பால்வளத்துறையை மேம்படுத்த முனைப்பான நடவடிக்கைகள்
Posted On:
16 DEC 2022 5:49PM by PIB Chennai
கால்நடை மற்றும் பால்வளத்துறை கடந்த 7 ஆண்டுகளில் 7.93 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் கடந்த 2014-15ம் ஆண்டு முதல் 2022-21 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கால்நடை மற்றும் பால்வளத்துறை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுள்ளது. 2020-21ம் ஆண்டின் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியில் கால்நடை மற்றும் பால்வளத்துறையின பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாகும். சுமார் 8 கோடி குடும்பங்கள் கால்நடை கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணைகள் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் இந்த துறையை மேம்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள்:
- ராஷ்டிரிய பசுக்கள் இயக்கம்
- பால் வளத்துறைக்கான தேசிய வளர்ச்சித் திட்டம்
- பால்பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி
- தேசிய கால்நடை இயக்கம்
- கால்நடைகள் சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு
- விலங்குகளின் நோய்களை கட்டுப்படுத்தும் தேசிய அளவிலான திட்டம்
- கால்நடைகள் கணக்கெடுப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த மாதிரி ஆய்வு
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் நாட்டு (மாடு) இனங்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள்
- கிராமப்புறங்களில் பல்முனை செயற்கை கருத்தரிப்பு தொழில் நுட்பவியலாளர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்குதல்
- தற்போது உள்ள செயற்கைக் கருத்தரித்தல் சங்கிலியை பலப்படுத்துதல்
- தேசிய அளவிலான செயற்கை கருத்தரிப்புத் திட்டங்கள்
- ஆர்ஜிஎம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்
பால்வளத்துறையில் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்களுக்கான உள்கட்டமைப்பு வசதி, கால்நடைகளுக்கான தீவனங்கள் வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், இனப்பெருக்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், கால்நடைகளுக்கான மருந்து பொருட்கள் மற்றும் தடுப்பூசி அலகுகள், கால்நடை கழிவுகளை வேளாண் கழிவு மேலாண்மையாக மாற்றும் முயற்சி ஆகியவை தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கு, கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பபட்ட கேள்விக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884202
**************
SM/ES/RS/KRS
(Release ID: 1884298)