சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஃபெனெக் ஃபாக்குஎனப்படும் 2 அரியவகைஉயிரினங்கள் மீட்பு
Posted On:
16 DEC 2022 3:34PM by PIB Chennai
சென்னை விமான நிலையச் சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாங்காக்கில் இருந்து 06.12.22 அன்று டிஜி-337 என்ற எண் கொண்ட விமானம் மூலம் சென்னை வந்த ஒரு ஆண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்திய பாஸ்போர்ட்டுடன் வந்த அவரது உடமைகளைப் பரிசோதித்ததில், ஒரு பையில் அரிய வகையைச் சேர்ந்த ஃபெனெக் ஃபாக் எனப்படும் உயிரினம் இரண்டு இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டது. உயிருடன் இருந்த 2 ஃபெனெக் ஃபாக்குகளும், தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மீண்டும் பாங்காக்கிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத் தகவலை, சென்னை சர்வதேச விமாநிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையர் டாக்டர் எம். மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
***************
SM/ES/KRS
(Release ID: 1884279)