பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி

Posted On: 16 DEC 2022 3:28PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி துறை இறக்குமதி தொடர்பான நடைமுறைகளை கவனிப்பதுடன் அது தொடர்பான அனுமதிகளை வழங்குகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான விவரங்கள்:

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி:  கடலோர கண்காணிப்பு அமைப்பு, லைட் வெயிட் டார்பிடோ, டிஓ-228 விமானம், ஆயுதங்களை  கண்டுபிடிக்கும் ரேடார், விரைவு ரோந்து கப்பல் (FPV) எஸ்சிஜிஎஸ் சோராஸ்டர், தீ கட்டுப்பாட்டு அமைப்பு, கவச பாதுகாப்பு வாகனம், பாதுகாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம், அதிவேக ரோந்து படகு உள்ளிட்டவற்றை கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா அதிகளவில் ஏற்றுமதி செய்துள்ளது.

  முக்கிய இறக்குமதி: ஜாமர், ரேடார், டாப்ளர் ரேடார், யுஏவி, நைட் விஷன் இமேஜிங் சிஸ்டம், கவச வாகனம், விமான நிலைய கண்காணிப்பு ரேடார்கள் (ஏஎஸ்ஆர்), இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை இந்தியாவின் முக்கிய இறக்குமதி தளவாடங்களாக உள்ளன.

இந்தத் தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884093

**************

SM/PLM/RS/KRS


(Release ID: 1884252) Visitor Counter : 228


Read this release in: English , Urdu