பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைப் பகுதிகள் மேம்பாட்டு நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
16 DEC 2022 3:34PM by PIB Chennai
எல்லைப்பகுதிகளில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த எல்லை சாலைகள் அமைப்பு என்ற நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 117 மாவட்டங்களில் விரைவான சாலைப்பணிகளை மேற்கொண்டுள்ளது.
எல்லைப் பகுதி சாலை மேம்பாட்டுக்காக கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2975 கோடியே 22 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 28 அன்று 75 புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சர்வதேச எல்லைப்பகுதிகளுக்கு அருகே உள்ளடங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு எல்லைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884099
**************
SG/PLM/RS/KRS
(रिलीज़ आईडी: 1884229)
आगंतुक पटल : 178