மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
செமிகண்டக்டர் தொழில் மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
16 DEC 2022 1:40PM by PIB Chennai
நாட்டில் செமிகண்டக்டர் மேம்பாடு மற்றும் உற்பத்திச் சூழலை மேம்படுத்த செமிக்கான் இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. செமிகண்டக்டர் சூழலில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் பல நாடுகளில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. செமிகண்டக்டர் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையில், இந்த மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக மின்னணு மதிப்புச்சங்கிலி இந்தியாவில் வளர்ந்து வரும் இருப்பை உறுதி செய்யும் வகையில், இது இருக்கும்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுடன், மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தை நவீனப்படுத்தவும், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மிகவும் அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதன் காரணமாக மொஹாலி. ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884068
**************
PKV/KPG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1884167)
வருகையாளர் எண்ணிக்கை : 256