மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் ஊடக ஒழுங்குமுறை
Posted On:
16 DEC 2022 1:39PM by PIB Chennai
டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தனிச் சட்டம் இயற்றும் உத்தேசம் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், 2000மாவது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்தது. டிஜிட்டல் ஊடகங்கள் இந்த விதிமுறைகள்படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் ஊடகங்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884067
SM/PKV/KPG/KRS
**************
(Release ID: 1884163)