தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவில் இணையதள சமநிலை
Posted On:
16 DEC 2022 1:36PM by PIB Chennai
இணைய தள உள்ளடக்கத்தை பாரபட்சமற்ற முறையில் அணுகும் கொள்கைகளைக் கொண்ட இணையதள சமநிலை குறித்த வழிகாட்டுதல்கள், தொலைத்தொடர்பு துறையால் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த உரிம செயல்பாட்டாளர்கள் ஆகியோருக்கான உரிம நடைமுறைகளை தொலைத்தொடர்பு அமைச்சகம் திருத்தியது. இணையதள சேவையை வழங்குவதற்கான உரிமத்துக்கான ஒழுங்குமுறை செயல்திட்டம் 2019 மே மாதம் வெளியிடப்பட்டது.
31.07.2018 அன்று பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு குறிப்பு அறிக்கை அனுப்பப்பட்டது. இணையதள சமநிலை தொடர்பான பரிந்துரைகளை 22.09.2020 அன்று தொலைத்தொடர்பு ஒழங்குமுறை ஆணையம் வழங்கியது. அந்த பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளன. இணையதள சேவை வழங்குனர்களுக்கான தொழில்நுட்ப தணிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசின் சவுஹான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்ளுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884064
SM/PLM/RS/KRS
(Release ID: 1884160)
Visitor Counter : 221