சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகள்

प्रविष्टि तिथि: 15 DEC 2022 2:38PM by PIB Chennai

கட்டுமானப் பணிகளின் கீழ் திட்டங்கள் இருக்கும்போது, வழக்கமான போக்குவரத்துக்குப்  பயன்படுத்தப்படும் இடத்திலிருந்து இதனைப் பிரிக்க நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.  கட்டுமானப்  பணிகளின் தேவைக்கேற்ப இவை  தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன.

இத்தகைய தடுப்புகள் சில சமயங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப்  பிற தேவைகளுக்காக மாநில அரசு அதிகாரிகளால்  அமைக்கப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புகளை அமைப்பதற்கு இந்திய சாலைக் காங்கிரசின்  தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. சாலைப்  போக்குவரத்து மற்றும் ஒப்பந்ததாரரின் பாதுகாப்பிற்காக  இந்திய சாலைக் காங்கிரசின்  தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல் படி கட்டுமான மண்டலங்களில் தடுப்புகள் அமைக்கப்படுவதை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக  முகமைகள் உறுதி செய்கின்றன.

இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

AP/SMB/KPG

 


(रिलीज़ आईडी: 1883912) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu