குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதிப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்க காதி இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
15 DEC 2022 2:36PM by PIB Chennai
காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் காதி இந்தியா நிறுவனம் 18 கிளைகள் மூலம் துறைச்சார்ந்த எட்டு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு காதி நிறுவனங்களின் 8035 விற்பனை மையங்களைக் கொண்டு பரந்த கட்டமைப்புடன் திகழ்கிறது. கிராமப்புற கைவினைகள் மற்றும் தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர்ப்புற நுகர்வோருக்கு வழங்குவதில் முக்கியப்பணியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மேற்கொள்கிறது.
காதிப் பொருட்களை விற்பனை செய்ய https://khadiindia.gov.in/ என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் காதிப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. புதுதில்லி, மும்பை, ஜெய்ப்பூர், போபால், கோவா ஆகிய விமான நிலையங்களில் காதிப் பொருட்கள் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள், காதி விற்பனையை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காதிப்பொருட்களின் வர்த்தகக் குறியீட்டை (பிராண்ட்) பாதுகாப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
*********************
AP/PLM/RS/KPG
(Release ID: 1883872)