குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூங்கில் சாகுபடியை அதிகரிக்க தனித்துவமான திட்டம்

Posted On: 15 DEC 2022 2:37PM by PIB Chennai

மத்திய  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மூலம் ‘பிராஜக்ட் போல்டு’ (Project BOLD) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை என்ற இத்திட்டம், 04.01.2021ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டத்தில் பழங்குடியின கிராமமான நிச்சலா மண்ட்வாவில் தொடங்கப்பட்டது. வறண்ட பகுதியான இப்பகுதியில் நிலத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அறிவியல் ரீதியாக சுற்றுச்சூழல் பயன்களை அடைவதுடன், மூங்கில் சாகுபடியை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அசாமிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய மூங்கில் மரக்கன்றுகள்  நடப்பட்டுள்ளன. இவற்றை உள்ளூரைச் சேர்ந்த எல்லைப்பாதுகாப்புப் படையினர் பாராமரிக்கின்றனர். இத்திட்டத்திற்கு இலக்குகள் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

 

**************

AP/PLM/RS/KPG


(Release ID: 1883871)
Read this release in: English , Urdu