குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நாட்டில் பிளாஸ்டிக் தொழில் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன: மத்திய இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா
Posted On:
15 DEC 2022 2:38PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் ,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் உதயம் (UDYAM) இணையதளத்தின் பதிவு புள்ளி விவரங்களின்படி, நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து அதன் தாக்கம் தொடர்பாக பிளாஸ்டிக் தொழில் நிறுவன சங்கங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தினருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. தடையைத் தொடர்ந்து, ஏற்படும் தாக்கத்திலிருந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்த விரிவான செயல் திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் மாற்று நிறுவனங்களை அமைத்தல் போன்றவை குறித்த அம்சங்கள் விரிவான செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாயிலாக, மறுசுழற்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், பயிலரங்குகள், காணொலி வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும், விரிவான செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
**************
AP/PLM/RS/KPG
(Release ID: 1883822)
Visitor Counter : 125