சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பாரத் தொடர்வரிசையில் வாகனங்கள் பதிவு
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2022 2:40PM by PIB Chennai
வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடையின்றி மாற்றும் வகையில் 2021ஆகஸ்ட் 26 அன்று சட்டபூர்வமான பொது விதி (ஜி.எஸ்.ஆர்.) 594 (இ ) – ஐ சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர்வரிசை எனும் புதிய பதிவு முறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் சேர்க்கப்பட்டது. இது 2021 செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின்கீழ் வருகிறது.
இந்நிலையில் 2022 டிசம்பர் 5 நிலவரப்படி புதுச்சேரியில் 16 வாகனங்கள் உட்பட மொத்தம் 49,696 வாகனங்கள் பாரத் தொடர்வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் தங்களது அதிகாரபூர்வ அடையாள அட்டையின் அடிப்படையில் பாரத் தொடர் வசதியைப் பெறலாம். தனியார் துறை ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்கள் உள்ளதாகச் சான்றளிக்கும் பணிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, புதிய வாகனங்கள் மட்டுமே பாரத் தொடரின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில நிபந்தனைகளை நிறைவு செய்வோர் பழைய பதிவை பாரத் தொடருக்கு மாற்றத் தக்க வகையில் 2022 அக்டோபர் 04 அன்று சட்டபூர்வமான பொது விதி (ஜி.எஸ்.ஆர்.) 672 (இ ) – ஐ அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். ****
AP/SMB/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1883816)
வருகையாளர் எண்ணிக்கை : 194