உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சி
प्रविष्टि तिथि:
15 DEC 2022 2:34PM by PIB Chennai
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களின் முனையங்களை விரிவாக்கம் செய்யவும், மாற்றியமைக்கவும், புதிய முனையங்களை கட்டவும், ஓடுபாதைகளை வலுப்படுத்தவும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்க ரூ.2467 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி விமான நிலையத்தில் 951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையத்தில் 380.87 கோடி ரூபாய் செலவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகவலை மக்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.
**************
AP/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1883803)
आगंतुक पटल : 222