தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
புதுதில்லி ரோஹினி இஎஸ்ஐசி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 4-வது பிரிவின் பட்டமளிப்பு விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்
Posted On:
15 DEC 2022 8:56AM by PIB Chennai
புதுதில்லி ரோஹினி இஎஸ்ஐசி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2015 மற்றும் 2016- ஆம் ஆண்டுப்பிரிவு மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்ச்சி சிரி கோட்டை அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, செயலாளர் ஆர்த்தி அகுஜா, இஎஸ்ஐசி பேராசிரியர் மகேஸ்வர்மா, தில்லி இந்திரபிரசாத் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு குரு கோவிந்த் சிங் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி பட்டதாரிகளுக்கு மத்திய அமைச்சர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள். அப்போது பேசிய பூபேந்தர் யாதவ், இளைய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மருத்துவ சேவையில் ஈடுபடுவது சமூகத்தில் சேவை செய்வதற்கான சிறந்த வழி என்று அவர் கூறினார். நம் நாட்டின் தொழிலாளர்களுக்கு எளிதில் மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையிலான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி, கொவிட்-19 காலத்தின் போது இஎஸ்ஐசி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப்பணியாளர்கள் சிறப்பான சேவைகளில் ஈடுபட்டதாக பாராட்டினார்.
**************
AP/IR/AG/RR
(Release ID: 1883664)