பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் 2-ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்திற்காக ரூ. 20263.07 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 14 DEC 2022 3:06PM by PIB Chennai

அதிகபட்ச ஊட்டச்சத்தை ஏற்படுத்துவதற்காக 2-ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வளர்இளம்பருவ சிறுமிகளுக்கான திட்டம்  மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் ரூ.19,834.37 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் ரூ.20,263.07 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி சேவைகளை வலுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை பெறவும் அங்கன்வாடி மைய ஊழியர்களின் திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி சேவை திட்டம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அங்கன்வாடி சேவை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, அதன் நோக்கங்கள், திட்ட பயனாளர்களின் தேவைகள், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகள் குறித்த பயிற்சி ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

**************

AP/IR/AG/KPG


(रिलीज़ आईडी: 1883566) आगंतुक पटल : 212
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu