மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பெண் குழந்தைகள் கல்விக்காக தேசிய கல்விக்கொள்கையின் கீழ் சிறப்பு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
Posted On:
14 DEC 2022 4:54PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020, 'சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி'யில் கவனம் செலுத்துகிறது. இது எந்தக் குழந்தையும் அவர்களின் பின்னணி மற்றும் சமூக-கலாச்சார அடையாளங்கள் காரணமாக கல்வி வாய்ப்பில் பின் தங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற பிரிவினரின் நலன்களை இது கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. கூடுதலாக, மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் கூட்டு செயல்பாட்டுடன் கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நடைமுறைகளை இது பரிந்துரைக்கிறது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் மூலமாக பள்ளிக் கல்வியில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5,646 கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 6,69,000 பெண் குழந்தைகள் இதில் சேர்ந்துள்ளனர்.
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை சமூக வலைதளங்ளகளில் விரிவாக மற்றும் வெற்றிகரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
**************
AP/PLM/KPG
(Release ID: 1883562)