நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எஞ்சியுள்ள கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு சர்க்கரை ஆலைகளை மத்திய அரசு ஊக்குவிக்கிறது

Posted On: 14 DEC 2022 3:17PM by PIB Chennai

உள்நாட்டில் சர்க்கரை நுகர்வு 260 லட்சம் மெட்ரிக் டன்  என்ற அளவை விட இயல்பான  சர்க்கரை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் அதிகப்படியாக 320 முதல் 360 லட்சம் மெட்ரிக்டன்  அளவிற்கு உற்பத்தி செய்து  இருப்பு வைத்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விவகாரத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கூறினார்.

இந்த அதிகப்படியான சர்க்கரை இருப்பு, சர்க்கரை ஆலைகளின் நிதிச்சூழலை பாதித்ததாகக் கூறினார். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் எஞ்சியுள்ள கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு மத்திய அரசு ஊக்குவித்தது. 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் என்ற இலக்கை மத்திய அரசு  நிர்ணயித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் 3.37 லட்சம் மெட்ரிக்டன், 2019-20-ம் ஆண்டில் 9.26 லட்சம் மெட்ரிக் டன், 2020-21-ம் ஆண்டில் 22 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2021-22-ம் ஆண்டில் 36 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு அனுப்பப்பட்டது. நடப்பு சர்க்கரை பருவத்தில் எஞ்சியுள்ள சுமார் 45 முதல் 50 லட்சம் மெட்ரிக்டன் அளவிலான சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் எஞ்சியுள்ள 60 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  

**************

AP/IR/AG/KPG



(Release ID: 1883482) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Marathi