பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம்

Posted On: 14 DEC 2022 3:11PM by PIB Chennai

புதிதாக ஒப்புதல் பெறப்பட்ட மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம், பல்னா திட்டம் என்ற பெயர் சேர்க்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பணிபுரியும் தாய்மார்களின் 6 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு தினசரி பராமரிப்பு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிலவரத்தை மேம்படுத்தி வருகிறது.

2020-21 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்காக பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.75 கோடியாக இருந்தது. 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.53 கோடியாக இருந்தது.

இத்தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி தெரிவித்துள்ளார்.

**************

AP/PKV/RR/KPG


(Release ID: 1883467) Visitor Counter : 196


Read this release in: English , Urdu