சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினரின் வாழ்வாதார உயர்வுக்காக சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 14 DEC 2022 2:56PM by PIB Chennai

பொருளாதாரத்தில் நலிவடைந்த, மிகவும் பின்தங்கியோர், சிறுபான்மையினர் உட்பட அனைத்துப்பிரிவினரின் நலன் மற்றும் வாழ்வாதார உயர்வுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், ஜவுளி, கலாச்சாரம், மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு, ஊரக மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சகங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி  மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கூறினார்.

அத்துடன் இஸ்லாமியர்கள் உட்பட 6 சிறுபான்மை சமுதாயத்தினரின் வாழ்வாதார உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை சிறுபான்மையினர் நல அமைச்சகம் அமல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

                                               **************

AP/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1883428) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati