வெளியுறவுத்துறை அமைச்சகம்

மும்பையில் நடைபெறும் மேம்பாட்டு பணிக்குழுவின் முதலாவது கூட்டம் பற்றி ஜி20 அமைப்பின் இந்திய பிரதிநிதி விளக்கம்

Posted On: 12 DEC 2022 7:36PM by PIB Chennai

டிசம்பர் 13 முதல் 16 வரை மும்பையில் மேம்பாட்டு பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஜி20 அமைப்பின் இந்திய பிரதிநிதி திரு அமிதாப் காந்த் இன்று செய்தியாளர்களிடையே உரையாற்றிய போது இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் அணுகுமுறை குறித்து விளக்கினார். 2010-ஆம் ஆண்டு முதல் ஜி20 அமைப்பில் மேம்பாட்டு திட்டங்களின் பொறுப்பாளராக மேம்பாட்டு பணி குழு செயற்பட்டு வருகிறது.

அப்போது பேசிய திரு காந்த், இன்று உலகம் சந்திக்கும் சவால்களை அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்று வலியுறுத்தினார். ஜி20 உறுப்பினர்கள் மட்டுமல்லாது சர்வதேச தெற்கு பிரதேசங்களின் விருப்பங்களையும் நமது முன்னுரிமைகள், பிரதிபலிக்கின்றன. உள்ளடக்கிய, லட்சியமிக்க, உறுதியான மற்றும் செயல் சார்ந்த அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. பருவநிலை செயல்பாடு மற்றும் நிதி அடங்கிய பசுமை மேம்பாடு, எரிசக்தி மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை -லைஃப்; நிலையான வளர்ச்சி இலக்குகளின் அமலாக்கத்தை துரிதப்படுத்துதல்; வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொது சரக்குகள்/ தரவுகள் முதலியவை இந்தியாவின் முன்னுரிமைகளாக இருக்கும் என்று திரு காந்த் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1882908

**************

 (Release ID: 1882908)

SRI/RB/RR



(Release ID: 1883004) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi , Marathi