ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மாநிலங்களுக்கு மத்திய உதவி வழங்கும் திட்டங்கள்

Posted On: 12 DEC 2022 4:46PM by PIB Chennai

2024க்குள் நாடு முழுவதும் ஊரகக் குடும்பங்கள் அனைத்திற்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் மத்திய அரசால்  2019 ஆகஸ்டிலிருந்து அமலாக்கப்படுகிறது.

இந்த இயக்கத்தின்கீழ் மத்திய அரசுக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நிதிப் பகிர்வு கீழ்க்காணும் வகையில் உள்ளது. சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு நிதிப் பகிர்வு (மத்தியப் பங்கு: மாநிலப் பங்கு) 100:00; சட்டமன்றங்கள் உள்ள  யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 90:10; மற்ற மாநிலங்களுக்கு  50:50.

மேலும் ஆதரவு மற்றும் தண்ணீர் தரம் கண்காணிப்பு முறை செயல்பாடுகளுக்கான நிதிப் பகிர்வு சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு நிதிப் பகிர்வு (மத்தியப் பங்கு: மாநிலப் பங்கு) 100:00; சட்டமன்றங்கள் உள்ள  யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 90:10; மற்ற மாநிலங்களுக்கு  60:40 என உள்ளது. தற்போதுள்ள நிதிப் பகிர்வு முறையை மாற்றும் யோசனை எதுவும் இல்லை என்று ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

******

AP/SMB/IDS



(Release ID: 1882909) Visitor Counter : 107


Read this release in: English , Urdu