பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

प्रविष्टि तिथि: 09 DEC 2022 2:44PM by PIB Chennai

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வசதிகளில் சலுகை அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

குழந்தைகள் கல்வி மானியம்: அதிகாரி பதவிக்கு கீழ் உள்ள அலுவலர்கள் /வீரர்களில்  பணியில் ஈடுபட்டு  காணாமல் போனவர்கள்/ஊனமுற்றவர்கள்/ கொல்லப்பட்டவர்களின் குழந்தைகளுக்குப் பின்வரும் கல்விச் சலுகை வழங்கப்படுகிறது:

கல்விக் கட்டணம்: சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் (முதலீட்டுக்  கட்டணம் மற்றும் எச்சரிக்கை முன்பணம் சேர்க்கப்படாமல், நிறுவனங்களின் தலைவரால் சான்றளிக்கப்பட்ட பள்ளியால் பராமரிக்கப்படும் பள்ளிப் பேருந்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் அல்லது மாணவர்களுக்கான ரயில்வே பாஸுக்குச் செலுத்தப்படும் சரியான கட்டணம் அல்லது சான்றளிக்கப்பட்ட பேருந்துக் கட்டணம் சேர்த்து ) முழுமையாகத் திருப்பித் தரப்படும்.

விடுதிக் கட்டணம்: உறைவிடப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு விடுதிக் கட்டணம் முழுவதுமாகத் திருப்பித் தரப்படும்.

புத்தகங்கள்/எழுது  பொருட்களின் விலை: ஆண்டுக்கு ரூ. 2000/- (ரூபா இரண்டாயிரம் மட்டும்) அல்லது மாணவர் கோரும் தொகை, எது குறைவோ அது வழங்கப்படும்.

சீருடை கட்டாயமாக இருக்கும் நிறுவனங்களில் அதன் விலை: ரூ. 2000/- (ரூபா இரண்டாயிரம் மட்டும்) அல்லது மாணவர் கோரும் தொகை, எது குறைவோ அது வழங்கப்படும்.

ஆடை: ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 700/- (ரூபாய்  எழுநூறு மட்டும்) அல்லது மாணவர் கோரும் தொகை, எது குறைவோ அது வழங்கப்படும்.

இந்தத் தகவலைப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

******


(रिलीज़ आईडी: 1882244) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu