உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
ஒருங்கிணைந்த குளிர்பதனத் தொடர் மற்றும் மதிப்புக் கூட்டல் உள்கட்டமைப்பத் திட்டம்
प्रविष्टि तिथि:
09 DEC 2022 3:15PM by PIB Chennai
உணவு பதன தொழில்துறை அமைச்சகத்தால் ஆர்வ வெளிப்பாட்டு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, "ஒருங்கிணைந்த குளிர் பதனத் தொடர் மற்றும் மதிப்பு கூட்டலுக்கான உள்கட்டமைப்பு" திட்டத்திற்குரிய வழிகாட்டுதல்களில் உள்ள தகுதி மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் இவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் திட்டம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
2022, ஜூன் 8 தேதியிட்ட திட்ட வழிகாட்டுதல்படி 2022, ஜூன் 21 அன்று விண்ணப்பங்கள் கோரப்பட்டு மொத்தம் 72 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த 72 விண்ணப்பங்களில், 53 விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டன. இவற்றில் 24 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களின் பட்டியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://www.mofpi.gov.in/sites/default/files/minutespac-cc-27oct-f_1.pdf) கிடைக்கும்.
இந்தத் தகவலை உணவு பதனத் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
(रिलीज़ आईडी: 1882239)
आगंतुक पटल : 161