ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரைவு சக்தி முனையக் கொள்கையின் கீழ் 79 சரக்கு முனையங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முதன்மை அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2022 3:45PM by PIB Chennai

விரைவுசக்தி சரக்கு முனையக் கொள்கையின்படி (ஜிசிடி) நாடு முழுவதும் 2022 -23, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 22 முனையங்கள் ஜிசிடி-யின் கீழ், முனையங்களாக மேம்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ள. இந்தத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 125 விண்ணப்பங்களில் 79 விண்ணப்பங்களுக்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜிசிடி-ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு சொந்தமில்லாத நிலங்களை அடையாளம் கண்டு அங்கு முனையம் அமைப்பதற்கான பணிகளை முடுக்கி விடுவர். மேலும், ரயில்வேக்கு முழுமையாக மற்றும் பகுதியாக சொந்தமான நிலங்களும் கண்டறியப்பட்டு முனையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

-----

AP/ES/KPG/IDS

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1882188) வருகையாளர் எண்ணிக்கை : 194
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu