பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விண்வெளிப் பாதுகாப்புத் திட்டம்

Posted On: 09 DEC 2022 2:49PM by PIB Chennai

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாப்புக் கண்காட்சியின்போது  இறுதிப் பயனர்களுக்குப் பொருத்தமான 75 பாதுகாப்பு விண்வெளிப் சவால்களுடன் மாண்புமிகு பிரதமரால் விண்வெளி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த சவால்கள் ஐடேக்ஸ்  மேக்-I மற்றும் மேக்-2 ன் தற்போதைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறை முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. புத்தொழில்கள், எம்எஸ்எம்இக்கள் உள்ளிட்ட தனியார் தொழில்துறையினரும்,  தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். சவால்கள், ஐந்து வகைகளாக உள்ளன. லான்ச் சிஸ்டம், சாட்டிலைட் சிஸ்டம், கம்யூனிகேஷன் & பேலோட் சிஸ்டம், கிரவுண்ட் சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் சிஸ்டம்.  இவை இடத்தின் முழுமையான 360 டிகிரி கோணத்தை வழங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளில் அரசு பல கொள்கை முடிவுகளை எடுத்து, உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (எஃப்டிஐ) தாராளமயமாக்கல் கொள்கை, தானியங்கி வழியின் கீழ் 74% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்கிறது; செயல்முறையை எளிதாக்குதல்; ஸ்டார்ட்-அப்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) உள்ளடக்கிய பாதுகாப்பு தனித்தன்மைத்  (ஐடெக்ஸ்) திட்டத்திற்கான புதுமைகண்டுபிடிப்புகளின் தொடக்கம்; பொதுக் கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை) ஆணை, 2017 ஐ செயல்படுத்துதல் போன்றவையும் இந்த முயற்சிகளில் அடங்கும்.

இந்தத் தகவலைப பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*****

AP/SMB/IDS

 


(Release ID: 1882164) Visitor Counter : 273


Read this release in: English , Urdu