ரெயில்வே அமைச்சகம்
572 ஒரே நிலையம், ஒரே விளைபொருள் திட்டத்தில் 535 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன
प्रविष्टि तिथि:
09 DEC 2022 3:50PM by PIB Chennai
உள்ளூர் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் வகையிலும், புறந்தள்ளபட்ட பிரிவைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் விதமாகவும், ஒரே நிலையம் ஒரே விளைபொருள் (ஓஎஸ்ஓபி) திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 572 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு ஓஎஸ்ஓபி ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் விளைபொருட்கள் சந்தைக்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் உதவும். ஒன்றுக்கும் மேற்பட்ட விளைபொருட்கள் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுழற்சி முறையில் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த 2022 மார்ச் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை இந்தத் திட்டத்தில் 532 ரயில் நிலையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் உற்பத்திப் பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- கைவினைப் பொருட்கள் / கலைப்பொருட்கள்
- ஜவுளி மற்றும் கைத்தறி
- பாரம்பரிய ஆடைகள்
- உள்ளூர் வேளாண் பொருட்கள் /பதப்படுத்தப்பட்ட உணவு / பாதி பதப்படுத்தப்பட்ட உணவு
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
-----
AP/ES/KPG/IDS
(रिलीज़ आईडी: 1882161)
आगंतुक पटल : 239