மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சமூக ஊடகத் தளங்களில் ஆபாசம் மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கை

Posted On: 09 DEC 2022 1:49PM by PIB Chennai

சமூக ஊடகத் தளங்களில் ஆபாசம் மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகளின் விளைவாக இணையதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பத்தகுந்த  சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

 ஆபாசமான மற்றும் தவறான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பினால் தகவல் தொழில்நுட்பச்  சட்டம் 2000-ன் கீழ் நடவடிக்கை, 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.  இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறுவர் ஆபாச உள்ளடக்கம் கொண்ட வலைதளங்களை மத்திய அரசு தொடர்ந்து தடைசெய்து வருகிறது. இணைய தள சேவை வழங்குபவர்களுக்கு எந்தெந்த வலைதளங்களில் என்னென்ன தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறித்து கண்காணிப்பு அவசியம் என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இணைய தளசேவை வழங்குபவர்களிடம் எந்தெந்த வலைத்தள தகவல்களை தங்களது குழந்தைகள் பார்க்கலாம் என்பது தொடர்பான அந்தந்தப் பெற்றோர்களுக்கு பிரத்யேகமான வசதியை செய்து கொடுக்க தொலைத்தொடர்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி பாதுகாக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே கல்வி நிலையங்களில் பார்க்க முடியும்.

 இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில்  தெரிவித்துள்ளார்.

**************

AP/GS/AG/IDS(Release ID: 1882158) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Marathi