சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாலை விபத்தில் காலை இழந்த, ராம்பூர் மாவட்ட விவசாயி திரு வேத்ராம் சிங்கைச் சந்தியுங்கள்

Posted On: 09 DEC 2022 1:39PM by PIB Chennai

ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வேத் ராம் சிங் என்ற விவசாயி சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார். இச்சம்பவம் திரு  வேத் ராமை  மட்டுமின்றி குடும்பம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த துரதிருஷ்டவசமான சம்பவங்களுக்குப் பிறகு, திரு வேத் ராம் தனது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டார். ஒரு நாள் திரு வேத் ராம் ஆலிம்கோ (இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகம்) பற்றித் தெரிந்துகொண்டார். அவர் தனது நண்பர் ஒருவரிடமிருந்து ஆலிம்கோவின் உதவி எண்ணைத் தொடர்புகொண்டார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கானபயிற்சித்   திட்டம் மற்றும் அதன்  பலனைப் பெறுவதற்கான செயல்முறை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் கான்பூரில் உள்ள ஆலிம்கோவிற்குச் சென்று, அதில்   பயிற்சி மற்றும் ஆலோசனைக்குப் பிறகு அவருக்கு முழங்காலுக்கு மேல் செயற்கைக் கருவி பொருத்தப்பட்டது, திரு வேத் ராம் மீண்டும் தனது பண்ணைக்குச் சென்று அங்கு வேலை செய்ய முடியும் என்பதில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.

அரசுக்கு நன்றி தெரிவிக்கும் திரு வேத் ராம், இதுபோன்ற அரசு திட்டங்கள் என்னைப் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார். எனது குறைந்த வருமான ஆதாரத்தால் என்னால் செயற்கைக் கால் பொருத்த முடியாமல் இருந்திருக்கும். இந்த புதிய கீழ்மூட்டு என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது, என் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. முகத்தில் புன்னகையுடன் அவர் ALIMCO ஊழியர்களின் ஆதரவிற்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.  ஆலிம்கோ குடும்பத்தின் உறுப்பினராக உணர்கிறேன் என்றும்  தெரிவித்தார்.

**************

AP/SMB/IDS

 


(Release ID: 1882154)
Read this release in: English , Urdu , Hindi