மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
விசாகப்பட்டிணத்தில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையம்
தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 3 இடங்களில் புதிய சேவை மையங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
09 DEC 2022 1:52PM by PIB Chennai
இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பானது 42 வாடிக்கையாளர் சேவை மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது விசாகப்பட்டிணத்தில் புதிய இணையப் பரிமாற்ற வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத்துறை போன்றவைகள் பயன்பெறும். குறிப்பாக விசாகப்பட்டிணம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாவதற்கு உதவி அளிக்கும்.
இந்திய தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பின் புதியதாக உருவாக்கப்படவுள்ள 42 வாடிக்கையாளர் சேவை மையங்களில் தமிழ்நாட்டிற்கு சென்னை-1, சென்னை-2, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வரவிருக்கிறது.
இந்த தகவலை மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.
**************
AP/GS/AG/IDS
(வெளியீட்டு அடையாள எண்: 1882101)
வருகையாளர் எண்ணிக்கை : 192