பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வங்கிகள், உள்ளிட்டவற்றின் பல்வேறு பணியிடங்களுக்கு 1.47 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 DEC 2022 2:50PM by PIB Chennai

நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் மத்திய அமைச்சகங்கள், துறைகள்,  பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வங்கிகள், உள்ளிட்டவற்றின் பல்வேறு  பணியிடங்களுக்கு 1.47 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு மாநிலங்களவையில்  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ஜூலை 2022ன் படி, 2013ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த பதவி உயர்வு நிலைகளின்படி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

**************

AP/IR/RS/IDS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1881928) வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu