தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ- ஷ்ரம் இணையதளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள்

प्रविष्टि तिथि: 08 DEC 2022 2:53PM by PIB Chennai

அமைப்புச் சாரா தொழிலாளர்களின் தேசிய அளவிலான தரவை அளிப்பதற்கான இ- ஷ்ரம் இணையதளத்தை ஆகஸ்ட் 26, 2021 அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை இ- ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்யலாம். கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவரங்கள், தொடர்பு விவரங்கள், முகவரி தகவல்,  தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ- ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

**************

AP/IR/RS/IDS


(रिलीज़ आईडी: 1881902) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu