அணுசக்தி அமைச்சகம்
இந்தியாவின் அணுமின் நிலையங்களை சைபர் தாக்குதலிலிருந்து பாதுகாக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்
Posted On:
08 DEC 2022 1:52PM by PIB Chennai
இந்தியாவின் அணுமின் நிலையங்களை இணையத் (சைபர்) தாக்குதலிலிருந்து பாதுகாக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); ; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்விஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் அங்கீகாரம், அதிகாரமளித்தல் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு வழிமுறைகள், கடுமையான உள்ளமைவுக் கட்டுப்பாடு, கண்காணிப்பு ஆகியவை அடங்கும் என்றார். மேலும், அணுமின் நிலையங்கள் இணையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன; மேலும் நிர்வாக வலைப்பின்னலிலிருந்து அணுக முடியாது. அணு மின் நிலையங்களில் உள்ள நிர்வாக நெட்வொர்க்குகளின் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
*****
AP/SMB/IDS
(Release ID: 1881825)
Visitor Counter : 188